காவடிச்சிந்து' அண்ணாமலையார் (1865 - 1891)

'காவடிச்சிந்து' அண்ணாமலையார் (1865 - 1891)
அறிமுகம்
அண்ணாமலை அவர்கள் தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப் புலவர் காவடிச்சிந்தின் தந்தை, சிலேடைப் புலி என்றழைக்கப்பட்டார். தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச்சிந்தின் தந்தை அழைக்கப்படுகிறார்.நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் உடனடியாக பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர். காவடிச் சிந்து, வீரை தலபுராணம் ஆகிய நூல்களை எழுதி உள்ளளர். இவர்தனிப்பாடல்கள்ஏராளமாகப் பல பாடியுள்ளார். அக்கால சிற்றிலக்கிய மரபின்படி யமகம், திரிபு, மடக்கு முதலிய சொல்லணிகள் அமைத்துப் பாடி உள்ளார்.